×

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 2வது நாளாக நேற்றும் 6 நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. எதிர்முனையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை வந்தது. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானமும் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் விமான நிலையத்திற்கு முன்னரே வந்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

The post தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Singapore ,Chennai ,Air India Express ,Chennai International Airport ,
× RELATED முன்கூட்டியே புறப்பட்ட விமானம்: பயணிகள் தவிப்பு