×

தூத்துக்குடியில் ஒரு வாரத்துக்கு பிறகு மீன்களின் விலை உயர்வு: ஒரு கிலோ சீலா ரூ.1200, விளைமீன், ஊளி தலா ரூ.400-க்கு ஏலம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு வாரத்துக்கு பிறகு மீன்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் தூத்துக்குடியில் இருந்து ஏராளமான நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அங்குள்ள ஏலக்கூடத்திற்கு குறைவான மீன்களிலே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இன்றைய ஏலத்தில் அனைத்து மீன்களும் சற்று விலை அதிகரித்து விற்பனையாகின.

ஒரு கிலோ சீலா ரூ.1200 வரை விற்பனையானது. விளைமீன், ஊளி மீன் ஆகியன தலா ரூ.400 வரையும், பாறை கிலோ ரூ.300 வரையும், நண்டு கிலோ ரூ.250 வரையும் ஏலம் போனது. சாளை மீன் ஒரு கூடை ரூ.2,400 வரையும், கண்ணாடி பாறை மீன் ரூ.500 வரையும் விற்பனையானது. சனிக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் விலையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர்.

The post தூத்துக்குடியில் ஒரு வாரத்துக்கு பிறகு மீன்களின் விலை உயர்வு: ஒரு கிலோ சீலா ரூ.1200, விளைமீன், ஊளி தலா ரூ.400-க்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED நாளையுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்