திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வன்முறை காரணமாக கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். செல்லக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினர் அனுமதி மறுத்து வந்தனர். கடந்த மாதம் அக்கிரமத்தை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே முகநூலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு பட்டியலின சமூகத்தினர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து காவல்துறை பாலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் ஊர்வலமாக சென்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பெண்கள் சிலர் அருள்வாக்கு கொடுத்தனர். கோயிலுக்குள் சென்று பட்டியலின சமூகத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்து திரும்பினர். இதுகுறித்து பேசிய அவர்கள், காவல்துறையின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
The post திருவண்ணாமலை அருகே கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள்: போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு appeared first on Dinakaran.