×

திருவண்ணாமலையில் சுற்றுலாதலமான சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது

தண்டராம்பட்டு : சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று வெகுவாக குறைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது.

மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கடும் குளிரிலும் அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, அறிவியல் பார்க், தொங்கு பாலம், மயில் கூண்டு, முயல் கூண்டு, டைனோசர் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இருப்பினும் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் சாத்தனூர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த மீன்களை சுற்றுலா பயணிகள் வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு பெழுதை கழித்தனர்.

இந்நிலையில், சுற்றுவட்டார பகுதி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர் மட்டம் தற்போது 118.30 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sathanur Dam ,Tiruvannamalai ,Thandarampattu ,Tiruvannamalai district ,golden jubilee… ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...