×

திருத்தணியில் 96 மி.மீ மழை பெய்தது : குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கனமழை பெய்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திவந்த நிலையில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை திருத்தணி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக திருத்தணியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனல் காற்று மற்றும் புழுக்கம் மேலும் குறைந்து சில்லென்று காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு அதிகபட்சமாக திருத்தணியில் 96 மி.மீ மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருவதால் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.

The post திருத்தணியில் 96 மி.மீ மழை பெய்தது : குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Tiruvallur district ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!