×

ஜில்லுனு ஜூஸ் குடிச்சு உடம்ப ஜில் பண்ணுங்க… மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க வழி இருக்கு…

மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வழக்கத்தை விட நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அத்துடன் மிலாடி நபி அரசு விடுமுறை தினம் என்பதால் வீடுகளில் மக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள கீழ்கண்ட உணவுப் பொருட்களை அனைவரும் கண்டிப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*மோர்: மிக அளவான உப்பு சேர்த்து ஓரிரு க்ளாஸ் மோர் அருந்துவது வெயிலில் இருந்து உங்களை வெகுவாய் பாதுகாக்கும்.
இஞ்சி, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சுவையினையும், ஆரோக்கியத்தினையும் கூட்டிக் கொள்ளலாம்.
*வெள்ளரி: 95 சதவீத நீர் சத்து கொண்டது. இதனை பச்சையாகவோ ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு சத்து இல்லாதது. குறைந்த கலோரி சத்து கொண்டது. ஸ்ட்ரெஸ் வெள்ளரி எடுத்துக் கொள்ளும் போதும் குறையும்.
*கம்மங்கூழ்: தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவில் கம்பு கூழும் பிரசித்தம். இரும்பு, கால்ஷியம், வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. இதனைக் குடித்துத்தான் நம் முன்னோர்கள் ஏசி இல்லாமல் இயற்கையிலேயே குளு குளு வென்று இருந்தார்கள். நோய், வெயில் கொடுமை இவற்றிலிருந்து தப்பிக்க இவ்வகை உணவுகள் பெரிதாய் உதவும்.
*கரும்பு சாறு: இதனை வாங்கும் பொழுது சுகாதாரமான தாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். கரும்பு சாறு, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து தரப் படும் பொழுது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பினை வெகுவாய் தவிர்த்து விடுகின்றது.
*நுங்கு: இதனை ஐஸ் ஆப்பிள் என்பர் அந்த அளவு குளிர்ச்சியினை உடலுக்குத் தர வல்லது.
*எலுமிச்சை-புதினா சாறு: இது உடலில் கட்டிகள், வேர்குரு தோன்றுவதை தவிர்க்கும்.
*நன்னாரி: இதனை ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.
*மாங்காய்: இந்த காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்களை நன்றாக சாப்பிடுங்கள். அதிலும் மாம்பழம் அநேக சத்துகளைத் தன்னுள் கொண்டது.
*நெல்லிக்காய்: இதனை சிறிதளவு ஜூஸாகவே தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

புரட்டாசியை புரட்டி போடும் வெயில்
உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பம், இதற்கு முன்னர் பதிவான வெப்பத்தை விட அதிகம் என காலநிலை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், அதை விட தற்போது வெயில் அதிகளவில் கொளுத்தி வருகிறது. இது கட்டுப்படுத்தப்படவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர் உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் எனில், பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் பாதிப்பால் பல்வேறு நோய்கள்
வாகனத்திலோ, நடந்தோ சிறிது துாரம் சென்றாலும் கூட அதிகளவில் வியர்த்து உடல்சோர்வு, தலைவலி ஏற்படுகிறது. குழந்தைகள் விடுமுறை நாட்களை கொண்டாட முடியாமல் வீட்டிற்குள்ளே அடைந்துள்ளனர். தினமும் மாலை 6 மணி வரை இந்த அவதி தொடர்கிறது என்றால் இரவு நேரங்களிலும் வீட்டில் துாங்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது.இரவு நேரங்களில் பெரும்பாலானோர் வீட்டு மொட்டை மாடியில் தஞ்சமடைகின்றனர். வயிற்றுக்கோளாறு, வியர்வைக்குரு, கண் நோய்கள், சிரங்கு , சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வெயிலின் பாதிப்பால் ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரி மழை, வெயில், காற்று ஆகியன ஏற்படுத்தும் குறைந்த மற்றும் உச்சபட்ச மாற்றங்கள் தான். காற்று வீசும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூட வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பது மக்களை பீதியடைய செய்கிறது.

நீர்நிலைக்கு படையெடுப்பு
வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கள்ளந்திரி கால்வாயை கடந்து செல்கிறது. இதில் தற்போது மதுரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல்வேலைகளில் மக்கள் வௌியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதில் வெயிலின் தாக்கத்தை தணிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள்ளந்திரி கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர்.

The post ஜில்லுனு ஜூஸ் குடிச்சு உடம்ப ஜில் பண்ணுங்க… மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க வழி இருக்கு… appeared first on Dinakaran.

Tags : Madurai ,Milady Nabi ,
× RELATED மிலாடி நபி டாஸ்மாக் கடை மூடல்