×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.10 அடி


மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 1,200 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 648 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 659 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 71.11 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 71.10 அடியானது.

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.10 அடி appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Cauvery ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!