புது டெல்லி: இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசிகளுக்கான மின் தேவை வருகிற 2050ம் ஆண்டுக்குள் 9 மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் மின்சார தேவையின் வளர்ச்சி எந்தெந்த நாடுகளில் அதிகரிக்கும் என்பது குறித்து ‘உலக எரிசக்தி பார்வை’ என்ற ஆய்வறிக்கை கருத்து தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது வீடுகளில் ஏசி வாங்குவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும், அந்த வகையில் வருகிற 2050ம் ஆண்டுக்குள் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசிகளுக்கான மின் தேவை ஒன்பது மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் மின் தேவை 21 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அதில் 10 சதவீத மின் தேவை ஏசி பயன்பாட்டுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மின்சாதன பொருட்களான தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் மின் தேவையை விட ஏசிகளுக்கான மின்தேவை அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2050ம் ஆண்டுக்குள் வீடுகளுக்கான ‘ஏசி’யின் மின்தேவை ஒன்பது மடங்கு அதிகரிக்கும்: சர்வதேச எரிசக்தி நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.