×

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரூ.30.78 கோடி பரிசு: இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி

துபாய்: ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி வழங்கப்பட உள்ளது.
2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற அணிக்கு ரூ.13.68 கோடி வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.18.46 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட ரூ.6.84 கோடி அதிகம். தற்போதைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி வழங்கப்பட உள்ளது.

இந்திய அணி ஏற்கனவே 2 முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியடைந்து 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு மட்டுமில்லாமல் மற்ற அணிகள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 4வது இடம் பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.26 கோடி, 5வது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.8.2 கோடி, 6வது இடம் பிடித்த இலங்கைக்கு ரூ.7.18 கோடி, 7வது இடம் பிடித்த வங்கதேசத்துக்கு ரூ.6.15 கோடி, 8வது பிடித்த வெஸ்ட் இண்டீசுக்கு ரூ. 5.13 கோடி, கடைசி இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.4.10 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரூ.30.78 கோடி பரிசு: இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி appeared first on Dinakaran.

Tags : Test Championship ,India ,Dubai ,ICC World Test Championship ,Australia ,2023-2025 ICC World Test Championship ,Dinakaran ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...