×

கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி காயாமொழி கிராமத்தில் ஊர்காத்த சாமி கோயில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடி காயாமொழியில் கோயில் அருகே தேவாலயம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட கோரி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்;

கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும். தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு; எனவே கோயில் அருகே தேவாலயம் கட்டலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : ICourt Madurai Branch ,Madurai ,
× RELATED தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு