×

தாராபுரம் அருகே சாலையோரம் குப்பைமேட்டில் குவிந்து கிடந்த தேசிய கொடி

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள இடையன் கிணறு கிராமம் தனியார் மில் அருகே குப்பை மேட்டில் 40க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த மாதம் சுதந்திர தின விழா கொண்டாடி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயன்படுத்தப்பட்ட துணிகளால் தைக்கப்பட்ட தேசியக் கொடிகள் சாலையோரம் குப்பைமேட்டில் குவிந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கிராம நிர்வாக அதிகாரி நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும், தேசியக் கொடியை குப்பை மேட்டில் வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post தாராபுரம் அருகே சாலையோரம் குப்பைமேட்டில் குவிந்து கிடந்த தேசிய கொடி appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Idayan Kinaru ,Tirupur ,Kundadam panchayat ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் அவதிப்பட்ட ஆம்புலன்ஸ்