×

போக்குவரத்து மாற்றத்தால் அவதிப்பட்ட ஆம்புலன்ஸ்

 

திருப்பூர், டிச.18: திருப்பூர் தாராபுரம் சாலை உஷா திரையரங்கிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரும் பாதையில் குடிநீர் கசிவு ஏற்பட்டு சாலையில் கசிந்து சாலை குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனை செப்பனிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நேற்று குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இதன் காரணமாக உஷா திரையரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் உஷா திரையரங்கத்திலிருந்து பல்லடம் சாலை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.

சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஆம்புலன்ஸ் வர முடியாமல் சிக்கி தவித்த நிலையில் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு பல்லடம் சாலையைச் சென்றடைந்தது. திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் சீரமைப்பு பணிகளை இரவு நேரத்தில் மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் காவல்துறை மற்றும் அரசுத் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post போக்குவரத்து மாற்றத்தால் அவதிப்பட்ட ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Tarapuram Road Usha Cinema ,Central Bus Stand ,Dinakaran ,
× RELATED தனியார் டவுன் பஸ்கள் மோதி விபத்து;...