×

இனம், மொழி, மதத்தால் பிளவு ஏற்படுத்த நினைக்கும் தமிழிசைக்கு குளிர் ஜுரம்தான் வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பில் உள்ள மன்னார்சாமி தெருவில் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை திறந்துவைத்தார். இதில் மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, மாமன்ற உறுப்பினர் அம்பேத் வளவன், ராஜ் முஹம்மது உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன்பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே? தமிழிசை என்ன செய்து விடுவார்? அவரே துப்பாக்கியை ஏந்துவாரா? தமிழ்நாடு இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி. தீவிரவாதத்துக்கு எப்போதும் தமிழக முதல்வர் துணை போகமாட்டார். தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவார். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுகிறார்கள். அ

தற்கு துளியும் தமிழகம் இடம் தராது. சகோதர, சகோதரிகளாக இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒன்றாக உள்ளனர். இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post இனம், மொழி, மதத்தால் பிளவு ஏற்படுத்த நினைக்கும் தமிழிசைக்கு குளிர் ஜுரம்தான் வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக் appeared first on Dinakaran.

Tags : Minister ,B. K. ,Sekarpapu Attack ,Perampur ,Anganwadi Centre ,Mannarsami Street ,Pulianthop, Chennai ,Minister of ,Hindu ,Religious Affairs ,Secretary of the Eastern District of ,Chennai ,P. K. Sekarpapu ,Mayor ,Priya ,Homeland Kavi ,B. K. Sekarpapu Attak ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...