×

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உள்பட 3 பேர் சாவு

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திப் பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்பட 29 பேருடன் ஒரு வேனில் வந்துள்ளார்.

இங்கு பட்டவராயர் கோயில் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றின் தடாகத்தில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது முருகன் மகள்கள் கல்லூரி மாணவி மேனகா (18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15), சிவகாசி அருகே நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் (27) ஆகிய 3 பேரும் திடீரென நீரில் மூழ்கி உள்ளனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

உடனே, உறவினரான வில்லிபுத்தூர் வன்னியம்பட்டியை சேர்ந்த சங்கரேஸ்வரன் (40) என்பவர் 3 பேரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆற்றிற்குள் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் மாரீஸ்வரனை மட்டும் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி ஆற்றில் மூழ்கிய 3 பேரை சடலமாக மீட்டனர்.

The post தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உள்பட 3 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Nellai ,Karaiyar ,Sorimuthu Ayyanar Temple ,Western Ghats ,Nellai district ,Murugan ,Pallapatti ,Sivakasi ,Virudhunagar district ,
× RELATED பரக்காணி பகுதியில் வெள்ளத்தில்...