×

7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட மாநில நிதி ஆணையம் அமைத்து ஆணை பிறப்பித்துள்ளது. பல்வேறு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆணையம் ஆய்வு செய்யும். மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கும்.

The post 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,7th State Finance Commission ,Chennai ,IAS ,State Finance Commission ,Alauddin ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...