×

தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.கே.ஆர்.என்.ராஜேஷ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5000 கோடி வழங்கப்படும் என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் பேசியதாவது:2023 மற்றும் 2024 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.657.53 கோடி. இது தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி இல்லை.  எனவே, தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூ.2000 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் ஒன்றிய அரசு இந்த நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதற்கு பதிலளித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. ரூ.2000 கோடி அல்ல, ரூ.5000 கோடியை கூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதுகுறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரையையும், நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசும் மேற்கொள்ளும்‘‘ என்று கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.கே.ஆர்.என்.ராஜேஷ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,MPKRN ,Rajesh ,Rajya Sabha ,CHENNAI ,Union Minister ,Nitin Gadkari ,KRN ,Rajeshkumar ,Dinakaran ,
× RELATED திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும்...