×

தமிழ்மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் வோங்க் தலைமையிலான அமைச்சரவையில் கே.சண்முகம் உள்பட 6 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்மொழி சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, “அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் பொதுமேடைகளில் சரளமாக தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் இருப்பார்களா? என நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும். தமிழ் மொழியை பேசாதவர்கள் வருங்காலங்களில் தமிழ் மொழியை மரியாதைக்குரிய மொழியாக நினைப்பார்களா? என்றும் நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும்.

ஏராளமான இளைஞர்கள் ஆங்கிலத்தை முதன்மையாக கருதி சரளமாக பேசுகிறார்கள். இதனால் தமிழ் மொழி மட்டுமல்ல, சீனாவின் மாண்டரின், மலாய் உள்பட பல்வேறு தாய்மொழிகள் பாதிக்கப்படும். எனவே மாணவர்களாகிய நீங்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் தமிழ் மொழியை துடிப்பான மொழியாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறைகணை தாண்டி பொதுஇடங்களிலும் தமிழில் பேச வேண்டும். பிற மொழி பேசுபவர்கள் கூட எளிதில் அணுக கூடிய மொழியாக, ஈடுபாட்டுடன் பேசும் மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும்” என்றார்.

The post தமிழ்மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Singapore Minister Shanmugam ,Singapore ,Tamils ,K. Shanmugam ,Wong ,Law Minister ,National University of Singapore Tamil Language Association ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...