×

இந்தியா- பாக். இடையே ஏற்பட இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: மீண்டும் தம்பட்டம் அடித்த அதிபர் டிரம்ப்

நியூயார்க்: இந்தியா-பாகிஸ்தான் மோதலை தீர்த்து வைத்ததாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புக்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல் உருவானது.

நான்கு நாட்கள் நடந்த இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவும் , பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.  இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம் தொடர்ந்து கூறி வருகின்றார். இந்தியா பலமுறை இந்த கருத்தை நிராகரித்துள்ளது. எனினும் அதிபர் டிரம்ப் அவ்வாறு கூறுவதை இன்னும் நிறுத்திக்கொள்ளவில்லை.

புளோரிடாவில் உள்ள மார் அ லாகோவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட இருந்த அணு ஆயுதப் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன். பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதாக பாகிஸ்தான் தலைமை எனக்கு நன்றி தெரிவித்தது. எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அனைத்து போர்களையும் நிறுத்தி விட்டோம். தீர்க்கப்படாத ஒரே ஒரு பிரச்னை ரஷ்யா- உக்ரைன் தான்” என்றார்.

Tags : India ,Pakistan ,President Trump ,New York ,Pahalgam, Kashmir, ,Operation Sindoor ,Kashmir ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...