×

தக் லைப் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ‘தக் லைப்’ திரைப்படத்துக்கான காட்சிகளை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ‘தக் லைப்’ திரைப்படத்தை இன்று மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம்.

The post தக் லைப் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Mani Ratnam ,Kamal Haasan ,Silambarasan ,Trisha ,Tamil Nadu ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு