×

சுசி ஈமு கோழி மோசடியில் அதன் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!!

கோவை: சுசி ஈமு கோழி மோசடியில் அதன் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி, பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார். ஆஸி. நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ஈரோட்டில் 2011ல் மோசடி நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈமு கோழி தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர். சேலத்தில் பதிந்த வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அபராதத்தை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது.

The post சுசி ஈமு கோழி மோசடியில் அதன் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Goa Investor Welfare Court ,Khrushami ,KOWAI ,GOI INVESTOR WELFARE COURT ,KURUSAMI ,SUSHI ,Susie Emu ,Govai Investor Welfare Court ,Dinakaran ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...