திருப்பூர்: தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கிடைக்க வேண்டும் என பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. பெண் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தது திராவிட இயக்கம்தான். பெண்களின் கல்வி உரிமை, சம உரிமைக்கு பாடுபடுவது திராவிட இயக்கம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கிடைக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை’ எனவும் முதலமைச்சர் பேசினார்.
