×

ரூ.2,284 கோடி பரிவர்த்தனை சூரத்தில் அதிரடி ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: குஜராத் மாநிலம் சூரத்தை தளமாகக் கொண்ட எல்.எல்.பி நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ரூ.2,284 கோடியை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சூரத் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அவத் ஹர்ஷத் யாக்னிக், வான்ஷ் மார்க்கெட்டிங், அசாமில் உள்ள துப்ரி ஆகிய இடங்களில் உள்ள ஷரணம் ஜூவல்ஸ் எல்எல்பி போன்ற இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. ரத்தினங்கள் மற்றும் நகை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் 3,700 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகளை நடத்தியதாகவும் அதில் ரூ.2284 கோடி சட்டவிரோதப்பணப்பரிவர்த்தனை நடந்து இருப்பதாகவும் ஆனால் நிறுவனங்களில் கணக்குப் புத்தகங்களில், ரூ. 520 கோடி பரிவர்த்தனை மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து நேரடி சோதனையில் ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள வர்த்தக விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. சரணம் ஜூவல்ஸ் எல்எல்பி மற்றும் அதன் அசோசியேட் வான்ஷ் மார்க்கெட்டிங், மற்ற ஷெல் நிறுவனங்களின் உதவியுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்ற போர்வையில் பல்வேறு நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சோதனையின் இந்த நிறுவனங்களின் ரூ.1.14 கோடி வங்கி டெபாசிட்களை அமலாக்கத்துறை பெமா சட்டப்படி முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ரூ.2,284 கோடி பரிவர்த்தனை சூரத்தில் அதிரடி ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Surat ,New Delhi ,Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கனமழையால் 26 பேர் உயிரிழப்பு