×

தமிழ்நாட்டின் வெற்றியை உரக்க சொல்வோம் லட்சிய பயணத்தில் வெல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ்நாட்டின் வெற்றியை உரக்க சொல்வோம்; லட்சிய பயணத்தில் வெல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தொழில்முனைவோர் சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாடு பொருளாதாரம், மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதனை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

‘‘தமிழ்நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நமது வரலாறு நாளைய தலைமுறையை வடிவமைக்க வேண்டும். பொய்மைகளை உடைக்கவும், மெய்ப்பொருள் நாடுவோர்க்கும் மாற்றத்தைப் படைப்போர்க்கும் வழிகாட்டிடவும் உண்மையை உரக்கப் பேசித்தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்; இலட்சிய பயணத்தில் வெல்வோம்.  இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டின் வெற்றியை உரக்க சொல்வோம் லட்சிய பயணத்தில் வெல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Suresh Sambandam ,India ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...