×

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் : விண்வெளிக்கு புறப்பட்ட சுபான்ஷு சுக்லாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!

டெல்லி : சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலாந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு : சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணம் இந்தியாவுக்கு ஒரு மைல் கல். சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோரின் ஆய்வு விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவும்.

பிரதமர் மோடி : சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள். சர்வதேச விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுவார். 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை சுபான்ஷு சுக்லா சுமந்து செல்கிறார்.

ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்: சுபன்ஷு சுக்லா இந்த மிஷனின் மிக முக்கியமான உறுப்பினர். இது இந்தியாவிற்கு பெருமையான தருணம். குரூப் கேப்டன் சுக்லாவுக்கு வாழ்த்துக்கள்.

The post 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் : விண்வெளிக்கு புறப்பட்ட சுபான்ஷு சுக்லாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : President ,Subanshu Shukla ,Delhi ,Drawpati Murmu ,Modi ,Subhanshu Sukla ,International Space Station ,ISRO ,NASA ,Axium Space ,International Space ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி