×

14 வயது மாணவருக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பள்ளியின் பெண் ஊழியர் கைது

நியூயார்க்: அமெரிக்காவில் 14 வயது மாணவருக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பிய பள்ளியின் பெண் ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க்கில் 14 வயது மாணவர் ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் மீது விசாரணை தொடங்கப்பட்டது.

கடந்த ஜூன் 9ம் தேதி, கிரேட்டர் சதர்ன் டியர் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளியின் அதிகாரிக்கு இது குறித்த புகார் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் செமங் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், எல்மிரா நகரைச் சேர்ந்த 22 வயதான அனமாரியா மிலாசோ என்ற அந்த பெண் ஊழியர், 14 வயது மாணவருக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பியது கண்டறியப்பட்டது.

விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16ம் தேதி அனமாரியா மிலாசோ கைது செய்யப்பட்டதாக செமங் கவுண்டி ஷெரிப் அலுவலகம் அறிவித்தது. அவர் மீது சிறுவர்களுக்குத் ஆபாச படங்களை அனுப்பியது, குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நியூயார்க்கின் ரொக்கமில்லா ஜாமீன் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட்டார். வெல்ஸ்பர்க் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிலாசோ பணியில் இருந்து நீக்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்துள்ளது; ஆனால் பள்ளியில் அவரது பதவி என்ன என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது.

The post 14 வயது மாணவருக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பள்ளியின் பெண் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : New York ,United States ,New York, United States ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...