×

மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஹெச்.எம். கைது

தொட்டியம்: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பாப்பாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தா.பேட்டை ஒன்றியம் ஜடமங்கலத்தை சேர்ந்த 15வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி பள்ளி கட்டிட மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டியுள்ளார்.

அப்போது தவறுதலாக துடைப்ப குச்சிகள் உருவி கீழே நிறுத்தி வைத்திருந்த தலைமை ஆசிரியர் சந்திரமோகனின் (60) கார் மீது விழுந்தது. இதனால் கோபமடைந்த அவர் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின்படி தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமை ஆசிரியர் சந்திரமோகனை நேற்று கைது செய்தனர்.

The post மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஹெச்.எம். கைது appeared first on Dinakaran.

Tags : Government School H.M. ,Tintiam ,Government Higher Secondary School ,Papapatti ,Tharpet ,Trichy District ,Jatamangalam ,Pettai Union ,Govt School H.M. ,Dinakaran ,
× RELATED தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்...