×

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இலங்கையை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு வெளியே சென்று வர கடும் கட்டுபாடுகள் உள்ளன. அதன்படி வெளியே செல்லும் நபர்கள், குறிப்பிட்ட காரணங்களை அங்குள்ள பதிவேட்டில் தினமும் பதிவிட்டு செல்ல வேண்டும். இதற்காக தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த மலையாண்டி(56), வெளியே சென்று வரும் முகாம் அகதிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. விசாரணையில் எஸ்.எஸ்.ஐ மலையாண்டி லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மலையாண்டியை நேற்றுமுன்தினம் பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் காமினி அதிரடியாக உத்தரவிட்டார்.

The post இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SSI ,Trichy ,Sri Lanka ,Lankan Tamil Rehabilitation Camp ,Trichy Kottapat ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ, காவலர் அதிரடி சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்