×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் சாதியை குறிக்கும் அடையாளங்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் கிளை

விருதுநகா்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு அளித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியாா் (ஆண்டாள்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்திப் பெற்றது. இந்த கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை ஆக. 7ம் தேதி கோலாகலமாக நடைபெறும்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். சாதியை குறிக்கும் டீ சர்ட் அணிய தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஜாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிவது கோடி பிடிப்பது போன்ற செய்லகளில் ஈடுபட உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

சாதியை குறிக்கும் விதத்தில் தலையில் ரிப்பன் கட்டிச் செல்லக் கூடாது. தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.

 

 

The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் சாதியை குறிக்கும் அடையாளங்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் கிளை appeared first on Dinakaran.

Tags : Srivilliputur Andal Temple ,Terotata ,Virudhunag ,High Court ,Maduraigil ,Audi Enthusiasm Festival ,Thar Festival ,Srivilliputur Andal Nachiyar Temple ,Patronages ,Nachiya (Andal) Temple ,Srivilliputur, Virudunagh District ,High Court Branch ,Dinakaran ,
× RELATED கோவிந்தா… கோபாலா கோஷம் முழங்க...