×

23 குற்றங்களில் தொடர்பு 5 பெண்களை பலாத்காரம் செய்த நார்வே இளவரசியின் மகன்

ஓஸ்லோ,ஜூன் 28: நார்வே நாட்டு பட்டத்து இளவரசி மெட் மாரிட்டின். இவரது 28 வயது மகன் மரியஸ் போர்க் ஹோய்பி. இவர் மெட் மாரிட்டின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர். கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது காதலியை தாக்கிய வழக்கில் பட்டத்து இளவரசியின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 3 பலாத்கார வழக்கு உள்பட 23 குற்றங்களில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காதலிகள் ஜூலியான் ஸ்னெக்கெஸ்டாட் மற்றும் நோரா ஹௌக்லேண்ட் உள்ளிட்ட 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

The post 23 குற்றங்களில் தொடர்பு 5 பெண்களை பலாத்காரம் செய்த நார்வே இளவரசியின் மகன் appeared first on Dinakaran.

Tags : Oslo ,Crown Princess ,Mette-Marit ,Norway ,Marius Borg Hoeby ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...