×

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பென்ஷன் ரூ.1,200 ஆக உயர்த்தி அரசாணை

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் என சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத்தை ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் காத்திருப்பு பட்டியலில் உள்ள 68,607 நபர்கள் மற்றும் ஏற்கெனவே பயன்பெற்று வரும் பயனாளிகளின் மாத ஓய்வூதியத்தை ரூ.1,000த்தில் இருந்து ரூ.1,200 ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பென்ஷன் ரூ.1,200 ஆக உயர்த்தி அரசாணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Principal Secretary ,Department of Social Welfare and Women's Rights ,Government of Tamil Nadu ,Indira Gandhi ,
× RELATED பெரம்பலூரில் மகளிர் குழுவினருக்கு சுயதொழில் பயிற்சி