×

ஸ்கோடா கோடியாக்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட கோடியாக் காரை, புதிய அம்சங்களுடன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.37.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் புதிய வாகன மற்றும் மாசு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இந்தக் கார் 4.2 சதவீதம் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 7.8 நொடிகளில் எட்டும். இதில் ஏற்கெனவே இருந்தபடி ஸ்டைல் , ஸ்போர்ட் லைன் மற்றும் லாரின் கிளமென்ட் என்ற மூன்று வேரியண்ட்கள் உள்ளன. 7 சீட்கள் உள்ளது. இதுதவிர, முழுமையான எல்இடி ஹெட்லைட்கள், பனோரமிக் சன்ரூப், ஆம்பியன்ட் லைட்டிங், கிளைமேட் கன்ட்ரோல், 9 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் உள்ளன.

The post ஸ்கோடா கோடியாக் appeared first on Dinakaran.

Tags : Skoda ,Skoda Auto India ,
× RELATED ஸ்கோடா குஷக்