×

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணம்; நடந்தது என்ன?.. கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கம்

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்தது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்; சிவராமனை போலீசார் கைது செய்யும் பொழுது தப்பி ஓடிய சிவராமன் தடுமாறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 19.08.2024-ம் கைது செய்யப்பட்ட சிவராமன் எலும்பு முறிவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனை விசாரணை செய்து பரிசோதனை செய்தபோது சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்கள் முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவராமன் உயிரை காப்பாற்ற கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக 21.08.2024 ம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சிவராமன் சிகிச்சை பலன் இன்றி இன்று (23.08.2024) காலை உயிரிழந்தார்.

போலீசார் கைது செய்வதற்கு முன்பு சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 09.07.2024 ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு TCR மருத்துவமனை கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணம்; நடந்தது என்ன?.. கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivaraman ,Krishnagiri District Police ,Krishnagiri ,Gandikuppam ,Naam Tamilar Party ,
× RELATED பள்ளியில் போலி என்சிசி முகாம்...