×

சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் சாத்விக், சிராக் காலிறுதிக்கு தகுதி: சிந்து, பிரனாய் வெளியேறினர்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் மே 27 முதல் சிங்கப்பூரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் செட்டி ஆகியோர் உலக தரவரிசையில் ஏழாவது நிலையில் உள்ள இந்தோனேசிய ஜோடியான சபர் காரியமன் குட்டாமா, மோ ரெசா பஹ்லேவி இஸ்பஹானி ஆகியோரை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. சுமார் ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த கடினமான போட்டியில் இந்திய ஜோடி 19-21, 21- 16, 21- 19 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா ஜோடியை தோற்கடித்தது. காலிறுதி ஆட்டத்தில் இந்திய ேஜாடி உலக தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள மலேசியா ேஜாடியான கோ ஸ்ஸே பி, நூர் இஸ்ஸூதீன் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பிரனாய், பிரெஞ்சு வீரர் கிறிஸ்டோ போபோவிடம் 16- 21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து, சீன வீராங்கனை சென்னிடம் 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ேஜாடியான காயத்ரி கோபிசந்த், ஜாலி ஆகியோர், சீன ஜோடியான ஜியா, சாங் ஆகியோரிடம் 8-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஜோடி சிங் சோனாலி, பிரமுதேஷ் ஜோடி ஆகியோர் ஆஸ்திரேலிய ஜோடியான சோர்வில்லே, ஏயூ ஆகியோரிடம் 21-23, 7-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில இந்தியா ஜோடியான காடே, கபூர் ஆகியோர் ஹாங்காக் ஜோடியான டாங்க், டிசே ஆகியோரிடம் 10- 21, 16- 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.

The post சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் சாத்விக், சிராக் காலிறுதிக்கு தகுதி: சிந்து, பிரனாய் வெளியேறினர் appeared first on Dinakaran.

Tags : Singapore Badminton Open ,Chadwick ,Chirac ,Sindhu ,Pranay ,Singapore ,Sairaj Rangrethy ,Sirak Chetty ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!