×

எளிய மருத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும். வெற்றிலையுடன் குங்குமப் பூ சேர்த்து சாப்பிட சுகப் பிரசவம் ஏற்படும்.சரக்கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.புளியாரைக் கீரையை அரைத்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து கட்டி வந்தால் ரத்தக் கட்டிகள் கரைந்து சரியாகி விடும்.இஞ்சியை பச்சடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகாது.

அத்திப் பழத்தைச் சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.சுக்குத்தூள் ஒரு கிராம் அளவில் தேனுடன் கலந்து உட்கொள்ள ஒற்றை தலைவலி நீங்கும்.ஏலக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர ஜீரணக் கோளாறுகளை நீக்கும். சுவாசக் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.கிராம்பு பசியை அதிகரிக்கும். பல் வலியைப் போக்கும்.தினமும் பால் காய்ச்சும்போது வரும் பாலாடையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பளிச்சென பிரகாசிக்கும். தேங்காய் அழுகியிருந்தால் எறிந்து விடாமல் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

கடற்கரை மணலில் காணப்படும் சிப்பிகளை எடுத்து உரசி விழுதை முகத்தில் தடவி வர பருக்கள் மறைந்துவிடும். பிஞ்சு வெண்டைக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு மறையும்.வெந்தயம் ஊற வைத்த நீரில் காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.முட்டைக் கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறையும்.பாலாடையுடன் மஞ்சள் தூள் கலந்து பூசி வர கண்ணுக்கு கீழுள்ள கருவளையங்கள் மறையும்.

நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சாறு கலந்து தேய்த்து குளித்து வர இளநரை மறையும்.சிறிது தேன் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர உதட்டிலுள்ள கருமை நீங்கி உதடுகள் அழகாக இருக்கும்.

தொகுப்பு: நெ.இராமகிருஷ்ணன்

The post எளிய மருத்துவம்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED டூர் கிளம்புறீங்களா?