×

மகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கு தந்தை, தாய்க்கு ஆயுள் தண்டனை: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தைக்கு மரண தண்டனையும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு, சிறுமியின் தந்தை கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல. எனவே, தந்தைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. சிறுமியின் தாய் குற்றத்துக்கு உடந்தையாக இல்லை என்பது சாட்சியங்களில் இருந்து தெரிவதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து ெசய்யப்படுகிறது. அவருக்கு ஒரு பிரிவின் கீழ் மட்டும் ஆறு மாதங்கள் தண்டனை விதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் ஏற்கனவே சிறையில் இருந்ததால் அவரை விடுதலை செய்து உத்தரவிடப்படுகிறது.

சிறுமியை பரிசோதித்த சென்னையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர், இரு விரல் சோதனை நடத்தியுள்ளது ஆதாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளதை ஏற்க முடியாது. இரு விரல் சோதனை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சோதனையை நடத்தும் மருத்துவர்கள் தவறான நடத்தை குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர் என்று எச்சரிப்பதாக தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இரு விரல் பரிசோதனை நடத்தும் மருத்துவர்கள் தவறான நடத்தை குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர் :- நீதிபதிகள்

The post மகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கு தந்தை, தாய்க்கு ஆயுள் தண்டனை: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ICourt ,Chennai ,ICourt ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...