- சோழங்கநல்லூர்
- உதவி ஆணையர்
- தடுப்பு
- விபச்சாரம் பிரிவின்
- யாஸ்மின்
- சைதப்பெட்டா
- சென்னை
- விபச்சாரத் தடுப்புப் பிரிவு
- தின மலர்
சோழிங்கநல்லூர்: சென்னை சைதாப்பேட்டை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு அப்பகுதி ெபாதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விபச்சார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை மசூதி பள்ளம் 2வது ெதருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அங்கு வாலிபர்கள் சிலர் வந்து சென்றது உறுதியானது.
உடனே அதிரடியாக பெண் போலீசார் உதவியுடன் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்திய போது, மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் புவனேஸ்வரி(53) 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.உடனே, போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட பெண் புரோக்கரை போலீசார் நீதிமன்றம் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது appeared first on Dinakaran.
