கன்னியாகுமரி: சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் ெதாலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், கன்னியாகுமரி பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த போது இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
