×

சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் கண்டுள்ளது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே படிப்படியாக உயர்ந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1% க்கு மேல் அதிகரித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்ந்து 80,378 புள்ளிகளாயின. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. டி.சி.எஸ்., இன்போசிஸ் பங்குகள் தலா 4%, டெக் மகிந்திரா பங்கு 3.8%, ஹெச்.சி.எல். டெக் பங்கு 3.7% விலை உயந்தன. அதானி போர்ட்ஸ் பங்கு 3%, எல்&டி பங்கு 1.99%, மாருதி சுசூகி பங்கு 1.6% விலை உயர்ந்து வர்த்தகமாயின. சன் ஃபார்மா, ரிலையன்ஸ் பங்குகள் தலா 1.5%, என்.டி.பி.சி., பார்த்தி ஏர்டெல் பங்குகள் தலா 1% விலை உயர்ந்து விற்பனையாயின. ஹெச்.டி.எஃப்.சி., டைட்டன், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் விலை குறைந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 271 புள்ளிகள் உயர்ந்து 24,484 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Donald Trump ,US presidential election ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் வீழ்ச்சி!!