×

தங்கம் விலை சவரன் ரூ.80 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக அக்டோர் 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.59,640க்கு விற்பனையானது. இது தங்கம் வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த ஏற்றம், இறக்கம் என்பது இந்த மாதமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் நாளான நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரை தொடர்ந்து நேற்று 5வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை சவரன் ரூ.80 உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...