×
Saravana Stores

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் ரஷ்ய பயணி கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் சாட்டிலைட் போனை வைத்திருப்பதற்கோ, பயன்படுத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலின் போது தீவிரவாதிகள் இந்த போனை பயன்படுத்தியது தான் இதற்கு காரணமாகும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரஷ்ய நாட்டை சேர்ந்த காய்டோ கார்மன் (52) என்ற பயணியின் பேக்கில் ஒரு சாட்டிலைட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போனை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை திருவனந்தபுரம் வலியதுறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் ரஷ்ய பயணி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram airport ,Thiruvananthapuram ,India ,Mumbai ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு