×

ரஷ்யா சென்றார் ஜெய்சங்கர்

மாஸ்கோ: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து ரஷ்யா சென்றார். நேற்று மாஸ்கோ வந்தடைந்த உடன் டிவிட்டரில் அவர் பதிவிடுகையில்,மாஸ்கோவிற்கு வந்துள்ளேன். என்னுடைய நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். வரும் 29ம் தேதி வரை அங்கு சுற்றுபயணம் செய்யும் அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய துணைப் பிரதமரும் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மந்துரோவை சந்தித்து பொருளாதார ஈடுபாடு தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிப்பார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவையும் அவர் சந்திக்கிறார். அப்போது,இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். மாஸ்கோவை தவிர செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வந்த நிலையிலும் இந்திா-ரஷ்யா உறவுகள் பலமாக உள்ளது. உக்ரைன் மீது படையெடுத்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை கண்டித்தன. ஆனால், ரஷ்யாவை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்யா சென்றார் ஜெய்சங்கர் appeared first on Dinakaran.

Tags : Jaishankar ,Russia ,Moscow ,Union Minister ,Delhi ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் பலி