×

ரஷ்யாவின் கடற்படை தினத்தை முன்னிட்டு 45 கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி: ஆப்ரிக்க தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பு

ரஷ்யா: ரஷ்யாவின் கடற்படை தினத்தை முன்னிட்டு 45 கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஜூலை 30ம் தேதி ரஷ்ய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பின்லாந்து வளைகுடாவில் செயிண்ட்.பீட்டர்ஸ் பர்கில் உள்ள நெவா ஆற்றிலும் நேற்று நடைபெற்ற அணிவகுப்பில் ரஷ்யா ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் 45 கப்பல்கள் இடம் பெற்றன.

இந்த அணிவகுப்பில் மொத்தமாக 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் பங்கேற்றதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் 4 ஆப்ரிக்க நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதாகவும் 5ஆப்ரிக்க நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பியிருந்ததாகவும் கிரெம்ளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரஷ்யாவின் கடற்படை தினத்தை முன்னிட்டு 45 கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி: ஆப்ரிக்க தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Russia's Navy Day ,Russia ,
× RELATED சென்னையில் 2 நாள் ரஷ்யா உயர் கல்வி கண்காட்சி