×

ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெபாசிட் மற்றும் இதர பரிவர்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.30ம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்சமாக ஒரு நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி கொள்ளலாம். வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவர் ரூ.2,000 மதிப்பிலான 10 தாள்களை மட்டுமே மாற்ற அனுமதி அளித்துள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி அறிவிப்பு மூலம் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் கறுப்புப்பணமாக பதுக்கப்பட்டிருக்கலாம் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi ,Reserve ,
× RELATED வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக...