×

ரூ.12000 கோடி மோசடி டெல்லியில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் ரூ.12ஆயிரம் கோடி மோசடி செய்தது, நிதியை திசைதிருப்பியது உள்ளிட்டவை தொடர்பாக ஜேபி இன்ப்ராடெக், ஜேபி அசோசியேட்ஸ் லிமிடெட் மற்றும் பல நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி என்சிஆர் மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய கவர்சன்ஸ், குல்ஷன், மஹாகன் மற்றும் சுரக்‌ஷா ரியாலிட்டி உள்ளிட்டவற்றிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

The post ரூ.12000 கோடி மோசடி டெல்லியில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Delhi ,New Delhi ,Mumbai ,Jaypee Infratech ,JP… ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்