×

ராயக்கோட்டை பகுதியில் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்

*கிலோ ரூ.60க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் நல்ல சீதோஷ்ண நிலை நிலகிறது. கர்நாடக மாநில எல்லை பகுதி என்பதால் ஈரதப்பதம் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் காய்கறிகளுக்கு அடுத்து பூக்கள் அதிகம் விளைவிக்கப் படுகிறது. கடந்த காலங்களில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை எதிர்நோக்கி சாமந்திப் பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது பூக்களுக்கான தேவை அதிகம் இருப்பதால், வருடம் முழுவதுமாக வருவாய் கிடைக்கும் வகையில் சாமந்தி, குண்டுமல்லி, முல்லை, ஆஸ்டல்பூ, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதனால் ராயக்கோட்டை மார்க்கெட்டிற்கு அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பூ வியாபாரிகள் ராயக்கோட்டைக்கு வந்து பூக்களை வாங்கிச்செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ராயக்கோட்டையில் தொட்டதிம்மன அள்ளி கிராம பகுதிகளில் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.10க்கு கூட விற்காத செண்டுமல்லி, ஆவணி மாத பிறப்பிற்கு பிறகு கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஆர்த்துடன் செண்டு மல்லி பூக்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர்.

The post ராயக்கோட்டை பகுதியில் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Raiakota ,Rajakota ,Sidoshna ,Rajakota, Krishnagiri district ,Karnataka ,Dinakaran ,
× RELATED ராயக்கோட்டையில் மந்த கதியில் நடக்கும் பாலம் கட்டுமான பணி