×

ராமநாதபுரம்-மேலூர் நான்கு வழிச்சாலை பணி : கோட்ட பொறியாளர் ஆய்வு

பரமக்குடி : ராமநாதபுரம்-மேலூர் நான்கு வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.ராமநாதபுரத்தில் இருந்து பாண்டியூர்-நயினார்கோவில் வழியாக மேலூர் செல்லும் இரு வழிச்சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக நான்கு வழிச்சையாக மாற்றுவதற்கு தமிழக அரசு ரூ.60.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நெடுஞ்சாலைத் துறை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நயினார்கோயில் முதல் குளத்தூர் வரையில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு கோட்டப் பொறியாளர் பிரசன்ன வேங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பரமக்குடி பிரிவு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ராமநாதபுரம்-மேலூர் நான்கு வழிச்சாலை பணி : கோட்ட பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Paramakudi ,Engineer ,Highways Department ,Tamil Nadu government ,Mellur ,Bandyur-Nainarkoil ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அருகே ரூ.100 ஜெராக்ஸ் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது!!