×

ராமதாஸ் அன்புமணியை சந்திப்பேன்: சீமான் தகவல்

அவனியாபுரம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மாநிலத்தின் நில வளத்துக்காகவும் வரிக்காகவும் மட்டும்தான் நம்மை வைத்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்கிறார்கள்.

பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது எடப்பாடிக்கு தேவையற்ற சுமை. பாமகவில் ஏற்பட்டிருப்பது உள்கட்சி பிரச்னை. செல்வப்பெருந்தகை ராமதாசை சந்தித்தது போல் நானும் சந்திப்பேன். அன்புமணியையும் சந்திப்பேன். பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. வன்னிய மக்களின் உரிமைகளுக்காக உருவான கட்சி. அதில் ஏற்பட்டிருக்கும் விரிசலை அன்பால் சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post ராமதாஸ் அன்புமணியை சந்திப்பேன்: சீமான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss Anbumani ,Seeman ,Avaniyapuram ,Naam Tamilar Party ,Chief Coordinator ,Madurai airport ,Union government ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!