×
Saravana Stores

வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல்

ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றன. சவாய் மான்சிங் அரங்கில் நடக்கும் இப்போட்டி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானுக்கு 5வது லீக் ஆட்டமாகும். ஏற்கனவே விளையாடிய 4 ஆட்டங்களில் அந்த அணி லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு அணிகளை வீழ்த்தி இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது. ஏற்கனவே 3 உள்ளூர் போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டமும் ஜெய்பூரில் நடப்பது ராயல்சுக்கு சாதகமான அம்சம்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் குவிக்க தடுமாறினாலும் சஞ்சு, பட்லர், ஹெட்மயர், பராக் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சிலும் சாஹல், போல்ட், ஆவேஷ் கான், பராக், பர்கர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாகப் பந்து வீசுவது, வாய்ப்பு கிடைக்கும்போது பேட்டிங்கில் கலக்குவது என அஷ்வின் ஆல் ரவுண்டராக தன் பங்குக்கு அணிக்கு பலம் சேர்க்கிறார்.
அதே சமயம், கில் தலைமையிலான குஜராத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

நடப்புத் தொடரில் வெற்றியுடன் தொடங்கிய குஜராத் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுளது. முதல் ஆட்டத்தில் மும்பை, 3வது ஆட்டத்தில் ஐதராபாத் அணிகளை வென்றுள்ளது. சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. தமிழ் நாடு டைட்டன்சா என ஆச்சர்யப்படும் அளவுக்கு தமிழ்நாடு வீரர்கள் 4பேரை கொண்ட அணியாக குஜராத் திகழ்கிறது.

‘இம்பேக்ட்’ வீரர் சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது குஜராத்துக்கு பலம். சாஹா, மில்லர், ரஷீத் கான், மோகித், உமேஷ் பங்களிப்பும் உதவிகரமாக உள்ளது. ஆனால் வெற்றிக்கான ஒருங்கிணைப்பு இல்லாதது குஜராத் அணியின் பலவீனமாக தொடர்கிறது. தொடர்ச்சியாக 5வது வெற்றியை வசப்படுத்தும் உத்வேகத்துடன் ராஜஸ்தானும், 3வது வெற்றிக்காக குஜராத்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

* இரு அணிகளும் 5 முறை மட்டுமே மோதியுள்ளதில் குஜராத் 4-1 என ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

* அதிகபட்சமாக குஜராத் 192, ராஜஸ்தான் 188 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக குஜராத் 177, ராஜஸ்தான் 118 ரன் எடுத்துள்ளன.

The post வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Gujarat ,Jaipur ,IPL ,Sawai Mansingh Arena ,Sanju Samson ,Dinakaran ,
× RELATED புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா...