×

3 காற்று இணைவு நீடிப்பதால் தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழை தொடரும்


சென்னை: கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர எல்லையோர மாவட்டம் தொடங்கி டெல்டா மாவட்டம் வரையில் கடலோரத்தில் மழை பெய்து இலங்கை வரை மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் மழை பெய்ததில் சென்னை சைதாப்பேட்டையில் அதிகபட்சமாக 62 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு மழை பெய்த பிறகு, குளிர்விக்க முடியாத மேகங்களாக உள்ளன. இவை கடலுக்குள் சென்றன. மதியம் வெயில் நிலவியது. இதையடுத்து, நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஆந்திராவை ஒட்டிய வளி மண்டலத்தில் இருவேறு காற்று சுழற்சி நீடிப்பதால், வடக்குப் பகுதியிலும் மழை பெய்யும். இது தெலங்கானா வழியாக பயணித்து அரபிக் கடல் நோக்கி செல்லும். இது தவிர ஒடிசா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

அது பின்னர் 20ம் தேதிக்கு மேல் வலுப்பெறும். வட மேற்கு காற்று மேற்கு காற்றும் சந்திக்கும் இடங்களான வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் அதிகம் காணப்படுகிறது. தென்மேற்கில் இருந்து வரும் காற்று படிப்படியாக தென்மேற்கு பருவ மழையை 16ம் தேதி வரை கொடுக்கும். அது வரை வெப்பச் சலன மழையாக இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பிற மாவட்டங்களில் பொதுவாக இ யல்பை ஒட்டியும் இருந்தது. மதுரையில் 103 டிகிரி வெயில் நிலவியது. திருச்சி 101 டிகிரி, சென்ைன 100 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை ெகாண்டுள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யும். இதே நிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

The post 3 காற்று இணைவு நீடிப்பதால் தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழை தொடரும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Andhra border district ,Delta district ,Sri Lanka ,Saidapet, Chennai ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...