×

டூவீலர், கார் விற்பனை வீழ்ச்சி; நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறது: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன. கடந்த ஆண்டில், டூவீலர்கள் விற்பனை 17 %, கார் விற்பனை 8.6 % குறைந்துள்ளது. மொபைல் சந்தையும் 7 % குறைந்துள்ளது. மறுபுறம், செலவுகள் மற்றும் கடன் இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள், கிட்டத்தட்ட எல்லாமே விலை உயர்ந்து வருகின்றன.

இது வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, ஆனால் ஒவ்வொரு சாதாரண இந்தியனும் அனுபவிக்கும் பொருளாதார அழுத்தத்தின் யதார்த்தம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரும் பயனடையும் வகையிலான பொருளாதாரம் நாட்டிற்குத் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

The post டூவீலர், கார் விற்பனை வீழ்ச்சி; நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறது: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Union Government ,New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!